Author: Kalminainet01

தேர்தல் நடவடிக்கைகளுக்கு போதியளவு உதவிகளை வழங்குமாறு – மத்திய வங்கி ஆளுநரிடம் கோரிக்கை!

தேர்தல் நடவடிக்கைகளுக்கு போதியளவு உதவிகளை வழங்குமாறு கோரி மத்திய வங்கி ஆளுநருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. எரிபொருள் மற்றும் மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு தேவையான பணத்தை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

பரீட்சைக் காலத்தில் மின் துண்டிப்பு: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

மின்சார அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். க.பொ.த. உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (புதன்கிழமை)…

சீனாவின் உத்தரவாதம் போதுமானதாக இல்லை

இலங்கைக்கு வழங்கியுள்ள கடன்களை மீளச் செலுத்துவதை மறுசீரமைப்பு செய்வதற்காக சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி (EXIM) தமக்கு செலுத்தப்பட வேண்டிய கடன் மற்றும் வட்டித் தொகையை இரண்டு வருடங்களுக்கு அறவிடாமல் இருப்பதனூடாக, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்ள…

கரு ஜயசூரியவிற்கு வழங்கப்படவுள்ள அதி உயர் விருது

முன்னாள் சபாநாயகர் தேசபந்து கரு ஜயசூரியவிற்கு அதி உயர் விருது வழங்கப்பட உள்ளது. இலங்கையில் வழங்கப்படும் அதி உயர் விருதான ஶ்ரீலங்காபிமானய என்னும் விசேட விருதே இவ்வாறு வழங்கப்பட உள்ளது. இந்த அதி உயர் விருதினை கரு ஜயசூரியவிற்கு வழங்க ஜனாதிபதி…

பரீட்சை எழுத சென்று கொண்டிருந்த மாணவி மீது, ஆசிட் வீச்சு

கேகாலை நகரில் உள்ள உயர்தரப்பரீட்சை நிலையத்திற்கு தந்தையுடன் பரீட்சைக்கு சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியொருவர் அமிலம் (அசிட்) வீச்சு தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேகாலை – பரகம்மன பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் காதலன் என கூறப்படும் இளைஞரொருவர் மோட்டார் சைக்கிளில்…

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 17வது ஆண்டு நினைவு அஞ்சலி — (திருக்கோவில் நிரருபர்)

(கனகராசா சரவணன்) திருகோணமலையில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 17வது ஆண்டு நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை (24) மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவு தூபியில் ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி…

அரச ஊழியர்களுக்கு நாளை சம்பளத்தை வழங்க நடவடிக்கை..!

அரச ஊழியர்களுக்கு நாளைய (25) தினத்திற்குள் சம்பளத்தை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அரசின் நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அல்லாத…

ஆரம்ப பராமரிப்பு சுகாதார பிரிவுகளுடன் தரத்தை நோக்கிய “வீறுநடை” என்ற தொனிப்பொருளின் கீழ் ஆராய்வு

நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை 2023 ஆம் ஆண்டை தரத்தை நோக்கிய வீறுநடை என்ற தொனிப் பொருளின் கீழ் சகல விதமான செயற்றிட்டங்களையும் கருத்திட்டங்களையும் முன்னோக்கி கொண்டு செல்வது என தீர்மானம் மேற்கொண்டதற்கு அமைவாக கல்முனை…

மட்டக்களப்பு மாவட்டத்தில் 238 பேரை தெரிவு செய்ய 18 கட்சி19 சுயேச்சை குழுக்கள் உட்பட 3240 பேர் தேர்தலில் போட்டி– மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி கலாமதி பத்மராஜா!

(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாநகரசபை 2 நகரசபை மற்றும் பிரதேசசபைகள் உட்பட 12 உள்ளூராட்சி மன்றங்களில் 238 பேரை தெரிவு செய்வதற்கு 18 கட்சிகள் 19 சுயேச்சைக்குழுக்கள் உட்பட 3240 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதாகவும் 145 வேட்பு மனுதாக்குதல்…

Tamils of Lanka: A Timeless Heritage இலங்கைத் தமிழர்கள்: ஒரு காலவரையறையற்ற பாரம்பரியம்

டிலக்‌ஷன் மனோரஜன் WALTHAM FOREST தமிழ் சமூகத்தின் ஏற்பாட்டில் 21.01.2023 சனிக்கிழமை இடம்பெற்ற தமிழ் மரபு திங்கள் 2023 நிகழ்வின் ஒரு பகுதியாக *தமிழ் மரபுக் கண்காட்சி* இடம்பெற்றது இதை *தமிழ் தகவல் நடுவம்* (*TIC*)மற்றும் *சமூக வளர்ச்சிக்கான மையம்* (*CCD*)ஆகிய…