-சௌவியதாசன்-
பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் மைதானத்தில் நேற்று(31) உள்ள பனைமரம் ஒன்றில். நாய் ஒன்று கொல்லப்பட்டு கட்டி தூக்கப்பட்ட நிலையிலும். மற்றும் ஒரு நாய் இறந்த நிலையிலும் அதன் அருகிலே ரெஜிபோம் பெட்டிகளும் காணப்பட்டது.
இந்த நாய் ஆட்டு இறைச்சியுடன் கலப்பதற்காக கொல்லப்பட்டிருக்கலாம். என்ற சந்தேகம். எழுந்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்னாள் இவ்வாறான. ஆட்டு இறைச்சி போன்று நாய் இறைச்சி விற்பனை செய்த சம்பவங்களும் நடைபெற்றதாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்றைய தினம்(01) புது வருட பிறப்பை முன்னிட்டு இறைச்சியுடன் கலப்பதற்காக இந்த நாய்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் திரு. கமலதாசன் அவர்கள் பெரியநீலாவணை போலீஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்து உள்ளார். அத்தோடு இது தொடர்பாக சுகாதார பிரிவினர்க்கும் அறிவிக்கப்பட்டுள்ளது எவ்வாறு இருந்தாலும் மக்கள் அவதானத்துடன். இது விடயங்களை கையாளுமாறு கேட்கப்படுகின்றனர்.



