அரச ஊழியர்களுக்கு நாளைய (25) தினத்திற்குள் சம்பளத்தை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசின் நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அல்லாத அனைத்து ஊழியர்களுக்குமான சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.