Author: Kalminainet01

மின்வெட்டு நேரத்தில் மாற்றம்:வெளியான புதிய அறிவிப்பு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம்(24.01.2023) இரண்டு மணித்தியாலம் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மின்வெட்டு நேரம் குறைப்பு இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக…

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான அறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய…

எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கின்றது! வெளியான தகவல்

இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அடுத்த மாதம் முதல் உள்நாட்டு எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன. சர்வதேச சந்தையின் தற்போதைய விலைகளுடன் ஒப்பிடும் போது 12.5 கிலோ கிராம்…

ரயில் தடம் புரள்வு : கரையோர ரயில் சேவை தாமதம்

களுத்துறையில் ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து கரையோர ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியில் இருந்து கொழும்பு கோட்டை நிலையம் நோக்கி பயணித்த சமுத்திரா தேவி புகையிரதம் இன்று காலை தடம் புரண்டதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இதனால்,…

ரணிலுக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பு! 21 திட்டங்களுக்கு உதவும் இந்தியா

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்தியா வருமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அழைத்துள்ளமையானது, ரணில் விக்ரமசிங்க ஊடாக இந்தியா செயல்திட்டங்களை முன்னெடுக்க விரும்புகிறது என்பதை கோடிட்டு காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணம் இறுதிப்படுத்தப்படாத நிலையில், பயணத்துக்கான தயாரிப்புக்களில், இலங்கையின்…

சீனாவில் அதிகரித்து வரும் கோவிட் தொற்று: ஒரே வாரத்தில் சுமார் 13,000 பேர் உயிரிழப்பு

சீனாவில் அதிகரித்து வரும் கோவிட் பாதிப்பால் அங்குள்ள வைத்தியசாலைகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 13,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. சீனாவில் கோவிட் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் கடந்த மாதம் தளர்த்தப்பட்டது. அப்போது முதல் கடந்த ஜனவரி…

அரச சேவை இடமாற்றம் தொடர்பில் வெளியாகியுள்ள திட்டவட்ட அறிவிப்பு

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரச சேவையில் இடமாற்றங்கள் செய்யப்பட முடியாது என தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை…

க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

நாளை(23.01.2023) ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று (22.01.2023) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இந்த…

குளிருடனான காலநிலை குறித்து எச்சரிக்கை

நாட்டின் அநேக பகுதிகளில் கடுமையான குளிருடனான காலநிலை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இது குறித்த எதிர்வுகூறலை வெளியிட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேக மூட்டத்துடன் வானத்தை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா, கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு வழங்க பொலிஸார் மறுப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான போதிய பாதுகாப்பை தற்போது கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களிடமிருந்து வழங்க முடியாது என பொலிஸ் திணைக்களம், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது. தேர்தல் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பொலிஸ்…