Author: Kalminainet01

நீதிபதிகளின் சம்பளத்தில் இருந்து வரி அறவிட இடைக்காலத் தடை!

ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட மற்றும் வருமானம் பெறுவோரிடம் வரி அறவிட அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை, நீதிமன்ற நீதிபதிகள் விடயத்தில் நடைமுறைப்படுத்தாமல் தற்போதைய நிலையை பேணுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த இடைக்கால தடை உத்தரவை…

வீட்டில் பரவிய தீ; தாய், குழந்தைகள் பலி

அநுராதபுரம் – எலயாபத்துவ பகுதியிலுள்ள வீடொன்றில் பரவிய தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த தீ விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததுடன், குழந்தைகளின் தந்தை தீக்காயங்களுடன் வைத்தியசாலையில்…

உயர் அழுத்த தண்ணீர் குழாய் வெடிப்பு – ஹெம்மாதகம நபர் உயிரிழப்பு

மாவனெல்ல பிரதேசத்தில் உயர் அழுத்த நீர் குழாயொன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹெம்மாதகம பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாவனெல்லை ஹெம்மாதகம வீதியில் வெட்டேவ நோக்கி செல்லும் நீர் குழாய்களின் அழுத்தத்தை மாவனல்லை நீர் வழங்கல் சபைக்கு…

சுதந்திர தின கொண்டாட்டங்கள் – ஜனாதிபதி ரணில் விதித்துள்ள நிபந்தனை

75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நாட்டின் தற்போதைய நிதி நிலைமை குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து தரப்பினருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். அரசியல் அதிகாரம் மற்றும் ஏனைய அதிகாரிகள் அதற்கேற்ப செலவுகளை குறைக்க வேண்டும் என ஜனாதிபதி…

நவீன தொழிநுட்பத்துக்கான விருதை பெற்ற வைத்திய கலாநிதி பரம்சோதி

மிகச்சிறந்த பாதுகாப்பு துறை விஞ்ஞானியாக வைத்திய கலாநிதி பரம்சோதி ஜெயக்குமார், அமெரிக்காவில் விருது பெற்றுள்ளார். வைத்திய கலாநிதி பரம்சோதி ஜெயக்குமார் ஆறு ஆண்டுகளாக டார்டெக் (TARDEC) உடன் இணைந்து கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஒப் டெக்னாலஜியில் (California Institute of Technology) பணியாற்றியுள்ளார்.…

கோதுமை, கோதுமை மாவு 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் விலை அதிகரிப்பு!

கோதுமை மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றின் விலை கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக அதிகரித்துள்ளது. விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசுக் கிடங்குகளில் இருந்து 30 லட்சம் தொன் கோதுமையை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா…

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது!

கடந்தாண்டு டிசெம்பர் 18 ஆம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (புதன்கிழமை) வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்க ஆணையாளர் தெரிவித்துள்ளார். அதன்படி பெறுபேறுகளை பரீட்சை திணைக்க இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திலோ அல்லது,results.exams.gov.lk என்ற இணையத்தளத்திலோ பார்வையிட…

ஜனாதிபதி ரணில் தலைமையில் இன்று சர்வகட்சி மாநாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சர்வகட்சி மாநாட்டை கூட்டவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களின் பங்கேற்புடன் சர்வகட்சி மாநாடு இன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.…

45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுவோருக்கு வரி விதிக்க IMF பரிந்துரை

மாதாந்தம் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுகின்றவர்களுக்கு வரியை அறவிடுமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்துக்கு நிபந்தனை விதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்தத் தகவலை நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில்…

நாவிதன்வெளி பிரதேச சபையை மீண்டும் தமிழரசுக் கட்சி கைப்பற்றியது!

பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் சுயேட்சைக் குழு உறுப்பினர் அமரதாஸ ஆனந்த என்பவர் தவிசாளராக ஆட்சி செய்து வந்த நிலையில் 14 குற்றச்சாட்டுக்கள் பெருன்பான்மை உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டு 2023ம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டமையினால் வறிதான தவிசாளர் வெற்றிடத்திற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேற்குறித்த…