மயக்க மருந்து வைத்திய நிபுணர் V.S.தேவகுமார் அவர்களின் சேவையின் நினைவுகளில் இருந்து சில பதிவுகள்!

 மயக்க மருந்து வைத்திய நிபுணர் V.S.தேவகுமார் அவர்களின் சேவையின் நினைவுகளில் இருந்து சில பதிவுகள்!


பல நூற்றாண்டு சரித்திரப் புகழ் கொண்ட கல்முனை ஆதார வைத்தியசாலையின், ஓர் வளர்ச்சி பொற்காலமாக கருதப்படும் இக்காலகட்டத்தில், இவ்வளர்ச்சியில் பங்கு கொண்ட பலரில் மயக்க மருந்து நிபுணர் V.S.தேவகுமார் அவர்களும் அடங்கியுள்ளார்.

இடமாற்றம் பெற்று சென்றாலும் இவரின் சேவையை எம்மால் மறக்க முடியாது அந்த வகையில் சேவையின் நினைவுகளில் இருந்து சில பதிவுகள்,,,,,,,,,

மயக்க மருந்து வைத்திய நிபுணர் V.S.தேவகுமார் அவர்கள் எமது வைத்தியசாலையின் பொது சொத்துப்போல் அனைவருடனும் அனைத்து செயற்பாடுகளிலும் தன்னை அர்ப்பணித்தவர்.

இவ்வைத்தியசாலையில் நீண்ட நாள் தேவையாக இருந்த அதிதீவிர சிகிச்சைப்பிரிவு,  நவீன சத்திரசிகிச்சை பிரிவு என்பவற்றை உருவாக்க வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி இரா.முரளீஸ்வரன் அவர்களுக்கு உறுதுணயாக தாமே பொறுப்பேற்று உழைத்து பல வெற்றிகளை பெற்றுத் தந்தவர். இவரின் காலத்தில், வழிநடத்தலில் இப்பிரிவுகள் உருவாக்கப்பட்டது என்றே கூறலாம்.

உருவாக்கம்  மட்டுமல்ல நோயாளர்களின் ஏற்ற இறக்கம், உயர்வு தாழ்வு பாராமல் மிக எளிமையாக அன்பை வெளிப்படுத்தும் மனதுடன் நோயாளிகளின் நிலைக்கு, தன்னையும் இறக்கி அவர்களின் மன நிலைக்கு ஏற்ற வடிவில் மிக அன்பாக கதைத்து  நோயாளர்களின் குறை தீர்க்க தன்னை அர்ப்பணித்தவர்.

அனைத்து ஒன்று கூடல்களிலும் மிக தெளிவான திட்டங்கள், தீர்வுகள், சில வினாக்களுக்கான தகுந்த விடைகள் , ஆலோசனைகள் அனைத்தையும் தனது ஆணித்தரமான முடிவாக வெளிப்படுத்த கூடிய பல துறை ஆர்வமிக்கவர்.

வைத்தியசாலையின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று  அனைத்து  தர உத்தியோகஸ்தர்களுடனும் பேசி ஓர் நட்புறவை பாதுகாத்து வந்த வைத்திய நிபுணர்.

பூந்தோட்டம் , பயிர்செய்கை, விளையாட்டு , ஆன்மீகம் போன்றவற்றுடன் நிபுணத்துவத்திலும் குறைவற்ற, நிறைவான சேவை.

இது மட்டுமின்றி ஆலயவழிபாட்டுக்கு என நேரத்தை ஒதுக்கி ஆன்மீக வழிபாடுகளிலும் தன்னை தவறாது இணைத்து கொள்பவர்.

இக்கட்டான நேரங்களில் ஆலய நிர்வாகத்திற்கு சுமைகளை குறைக்க தோள் கொடுப்பவர். தேவை ஏற்படின் தன் தோள்களில் தேரையும் சுமப்பவர். ஓர் நிபுணராக இல்லாமல் அனைத்து தர மக்களுடனும் மிக அன்பாாகவும் ஆதரவாகவும் பழகும் இறை பக்தர்.