முன்னாள் சபாநாயகர் தேசபந்து கரு ஜயசூரியவிற்கு அதி உயர் விருது வழங்கப்பட உள்ளது.

இலங்கையில் வழங்கப்படும் அதி உயர் விருதான ஶ்ரீலங்காபிமானய என்னும் விசேட விருதே இவ்வாறு வழங்கப்பட உள்ளது.

இந்த அதி உயர் விருதினை கரு ஜயசூரியவிற்கு வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

நாட்டுக்கு ஆற்றிய அளப்பரிய சேவையை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

எதிர்வரும் நாட்களில் கரு ஜயசூரியவிற்கு, ஶ்ரீலங்காபிமானய விருது வழங்கப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.