கல்முனை மாநகரசபை உறுப்பினர் புவனேஸ்வரியின் இழப்பு இந்தப் பிரதேசத்தின் இழப்பாகும்.
கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரனின் இரங்கல் செய்தி

கல்முனை மாநகரசபை உறுப்பினர் புவனேஸ்வரியின் இழப்பு இந்தப் பிரதேசத்தின் இழப்பாகும்.கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரனின் இரங்கல் செய்தி கல்முனை மாநகர சபையில் பாண்டிருப்பை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் திருமதி விநாயகமூர்த்தி புவனேஸ்வரியின் திடீர் மறைவு இந்தப் பிரதேசத்திற்கு பேரிழப்பாகும்.…

மகசீன் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பில் போராட்டம்

(கனகராசா சரவணன்) பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிதமிருக்கும் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து பயங்கரவாத சட்டத்தை ஒழிப்போம் எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை 8 மணிக்கு அடையாள உண்ணாவிரத போரட்டத்தில்…

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

பிரித்தானிய மகாராணியின் இறுதிக்கிரியை எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அன்றையதினம் இலங்கையில் விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் தொடர்ந்தும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு விண்ணப்பதாரிகள் ஒரு…

ராஜபக்ஸ குடும்ப ஆட்சி தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரியுள்ள அமெரிக்க செனட்டர்கள்

ராஜபக்ஸ குடும்பத்தின் மோசமான ஆட்சி மற்றும் பொருளாதார கொள்கைகள் தொடர்பான சவால்கள் உட்பட இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண விரிவான சர்வதேச அணுகுமுறையைக் கோரும் பிரேரணை அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணையை அமெரிக்க…

கல்முனை மாநகர சபை உறுப்பினர் விநாயகமூர்த்தி புவனேஸ்வரி காலமானார்

கல்முனை மாநகர சபை உறுப்பினர் விநாயகமூர்த்தி புவனேஸ்வரி காலமானார் கல்முனை மாநகர சபை உறுப்பினரான பாண்டிருப்பைச் சேர்ந்த திருமதி விநாயகமூர்த்தி புவனேஸ்வரி 15.09.2022 இன்று காலமானார். சுகயீனம் காரணமாக கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் சிகிச்சை பயனளிக்காது காலமாகியுள்ளார்.

இன்று கல்முனையை வந்தடைந்தது தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகனப் பேரணி!

இன்று கல்முனையை வந்தடைந்தது தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகனப் பேரணி! கபிலன் தியாக தீபம் திலீபனின் நினைவு வாரத்தை முன்னிட்டு பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய அவருடைய திருவுருவப்படம் தாங்கிய வாகன பேரணி இன்று கல்முனை பிரதேசத்தை வந்தடைந்தது.…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையை பாராட்டி நன்றி மடல்!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையை பாராட்டி நன்றி மடல்! அண்மையில் நோயின் நிமித்தம் கல்முனை ஆதார வைத்தியசாலையின் விடுதியில் தங்கி, சிகிச்சை பெற்ற சேவைநாடியொருவர், தனக்கு கிடைத்த சேவையின் திருப்தி தன்மையை ஏற்று, நன்றியை தெரிவிக்கும் முகமாக , மனதார பாராட்டும்…

கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப் போட்டியில் கல்முனை உவெஸ்லி, கார்மேல் பற்றிமா சேனைக்குடியிருப்பு கணேஷா ஆகியவற்றுக்கு 9 பதக்கங்கள்!

கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப் போட்டியில் கல்முனை உவெஸ்லி, கார்மேல் பற்றிமா சேனைக்குடியிருப்பு கணேஷா ஆகியவற்றுக்கு 9 பதக்கங்கள்! பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப் போட்டி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இதில் கல்முனை தமிழ் கோட்ட பாடசாலைகளுக்கு…

எதிர்வரும் 19 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை! சற்றுமுன் வெளியான அறிவிப்பு

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 19ஆம் திகதி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விசேட விடுமுறை செப்டெம்பர் 19ஆம் திகதி அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்திருந்தது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு, இந்த…

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிரான மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

பெண்கள், சமூக சிவில் செயற்பாட்டாளர்கள்,சிவில் அமைப்புப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிரான கவனயீர்ப்பு கண்டனப்போராட்டம் மட்டக்களப்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. வடகிழக்கிலுள்ள சிவில் அமைப்புக்களின் அலுவலகங்கள் உடைக்கப்பட்டு முக்கிய ஆவணங்கள் எடுத்துச் செல்லப்படுதல் மற்றும் சிவில் அமைப்புப்…