இன்று கல்முனையை வந்தடைந்தது தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகனப் பேரணி!

கபிலன்

தியாக தீபம் திலீபனின் நினைவு வாரத்தை முன்னிட்டு பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய அவருடைய திருவுருவப்படம் தாங்கிய வாகன பேரணி இன்று கல்முனை பிரதேசத்தை வந்தடைந்தது.

இன்று மாலை பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலுக்கு சென்றபோது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.