கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையை பாராட்டி நன்றி மடல்!

அண்மையில் நோயின் நிமித்தம்  கல்முனை ஆதார வைத்தியசாலையின் விடுதியில்  தங்கி, சிகிச்சை பெற்ற சேவைநாடியொருவர், தனக்கு கிடைத்த சேவையின் திருப்தி தன்மையை ஏற்று, நன்றியை தெரிவிக்கும் முகமாக , மனதார பாராட்டும் ஆவண சின்னத்தை வழங்கி சேவையாளர்களையும் நிர்வாகத்தையும் பாராட்டிய எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதே வேளை இதே பிரிவில் சேவைபெற்ற இங்கு கடமையாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவர் பரிசுப்பொருட்களை வழங்கி பாராட்டிய சம்பவமும் குறிப்பிடத்தக்கது.

ஓட்டமாவடி 3ஐ சேர்ந்த MLA றஸ்தாக் என்பவரின் காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக பேராபத்தில் இருந்து, அவரை காப்பாற்றி 12 நாட்கள் மிகவும் மெச்சத்தக்க சேவையை வழங்கிருந்தமைக்காக
அவர்களின் குடும்பத்தாரினால்
பின்வருமாறு தொனிப்பொருள் அடங்கிய மடல் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டம், பாரபட்சம் எதுவும் பாராமல்  அனுமதி வழங்கி, தேவையான உதவிகளையும், சிறந்த மனித நேய சிகிச்சைகளையும் வழங்க உதவிய வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி இரா முரளீஸ்வரன் அவர்கட்கும் வெற்றிகரமான சிகிச்சையை வழங்கிய சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் AWM சமீம் அவர்கட்கும் இவ் வைத்திய குழாத்துடன் இணைந்த அனைத்து சேவையாளர்களுக்கும் நன்றி தெரிவித்து இந்நினைவு சின்னம் வழங்கப்பட்டுள்ளது.