கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப் போட்டியில் கல்முனை உவெஸ்லி, கார்மேல் பற்றிமா சேனைக்குடியிருப்பு கணேஷா ஆகியவற்றுக்கு 9 பதக்கங்கள்!

பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப் போட்டி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

இதில் கல்முனை தமிழ் கோட்ட பாடசாலைகளுக்கு 9 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை இரண்டு தங்கப்பதக்கங்களையும் மூன்று வெண்கல பதக்கங்கங்களையும், கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை ஒரு தங்கப்பதக்கத்தையும் ஒரு வெண்கல பதக்கத்தையும், சேனைக்குடியிருப்பு கணேஷா மகா வித்தியாலயம் இரண்டு வெண்கல பதக்கங்களையும் பெற்றுள்ளன.

இந்த மாணவர்களுக்கான பயிற்றுவிப்பாளர்களாக கடமையாற்றும் எம் பாலுராஜ் எம். சோபன்ராஜ் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

You missed