(கனகராசா சரவணன்)

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிதமிருக்கும் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து பயங்கரவாத சட்டத்தை ஒழிப்போம் எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை 8 மணிக்கு அடையாள உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனின் ஏற்பாட்டினையடுத்து இன்று காலை 8.00 மணிக்கு காந்தி பூங்காவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியேந்திரன், முன்னாள் அரசாங்க அதிபர் உதயகுமார் மற்றும் அரசியல்வாதிகள் வணபிதாக்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி ஆதரவாளர்கள் ஒன்றினந்தனர்.

இதில் பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிப்போம் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட அரசியல்கைதினை விடுதலை செய்யவும், சிறையில் உண்ணாவிரதமிருக்கு கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து அடையாள உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.