பிரித்தானிய மகாராணியின் இறுதிக்கிரியை எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அன்றையதினம் இலங்கையில் விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் தொடர்ந்தும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு விண்ணப்பதாரிகள்

ஒரு நாள் மற்றும் வழக்கமான சேவைகளின் கீழ் கடவுச்சீட்டு பெறுவதற்கு முன்னரே திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, திணைக்களத்தினால் வழங்கப்படும் ஏனைய சேவைகள் அன்றைய தினம் வழங்கப்பட மாட்டாது.

மக்களுக்கு அறிவிப்பு

எக்காரணம் கொண்டும் திகதி மற்றும் நேரங்களை முன்பதிவு செய்யாத எவரும் அன்றைய தினம் வரவேண்டாம் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.