கல்முனை மாநகரசபை உறுப்பினர் புவனேஸ்வரியின் இழப்பு இந்தப் பிரதேசத்தின் இழப்பாகும்.
கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரனின் இரங்கல் செய்தி

கல்முனை மாநகர சபையில் பாண்டிருப்பை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் திருமதி விநாயகமூர்த்தி புவனேஸ்வரியின் திடீர் மறைவு இந்தப் பிரதேசத்திற்கு பேரிழப்பாகும்.

தனது பதவிக்காலத்தில் தன்னால் முடிந்தவரை தான் பிரதிநிதித்துவப் படுத்திய வட்டாரம் மாத்திரமின்றி பாண்டிருப்பு கிராமத்திற்கும் கல்முனை பிரதேசத்திற்கும் பல்வேறு சேவைகளை செய்துள்ளார்.

அனைவருடனும் பண்பாகவும் பணிவுடனும் பழகும் புவனேஸ்வரி மாநகர சபை உறுப்பினராக இருந்த காலத்தில் பாண்டிருப்பு கிராமத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டுள்ளார். இவரின் சேவை உண்மையில் ஒரு முன்னுதாரணமான சேவையாகும்.

சுகையீனமுற்றிருந்த புவனேஸ்வரி சிகிச்சை பலனின்றி எதிர்பாராதவகையில் மறைந்த செய்தி
மிகவும் மன வேதனையானதாகும்.

கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன் தனது இரங்கல் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளமை,

மாநகரசபை உறுப்பினராக சேவை செய்த காலத்தில் கட்சி பிரதேச வட்டார வேறுபாடுகளின்றி எல்லோரிடனும் மக்களின் நலன் சார்ந்த விடயங்களில் ஒத்துழைப்பு வழங்கி செயல்பட்டிருந்தார்.

இன்னும் பல சேவைகளை அவர் வழங்கக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் அன்னாரின் இந்த திடீர் மறைவை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

பிறக்கும் மனிதன் என்ற ஒரு நாள் இறப்பு என் இறை நியதிக்கு எல்லோரும் உட்பட்டவர்களாக அன்னாரின் பிரிவால் துயறுற்றிருக்கும் அமரர் புவனேஸ்வரியின் குடும்பத்தின் துயரில் நாமும் பங்கு கொண்டு கொள்கின்றோம்.

இறையடி சென்றுள்ள அமரர் விநாயகமூர்த்தி புவனேஸ்வரி அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கின்றோம்