நாட்டின் அநேக பகுதிகளில் கடுமையான குளிருடனான காலநிலை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இது குறித்த எதிர்வுகூறலை வெளியிட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேக மூட்டத்துடன் வானத்தை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா, கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் பொலனறுவை மாவட்டங்களிலும் இடைக்கிடை இடியுடன் கூடிய மழை அல்லது மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்

சில இடங்களில் 75 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை வேளையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இடியுடன் மழை பெய்யும் போது பலத்த காற்று வீசும் சாத்தியம் காணப்படுவதாகவும் மக்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.