களுத்துறையில் ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து கரையோர ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியில் இருந்து கொழும்பு கோட்டை நிலையம் நோக்கி பயணித்த சமுத்திரா தேவி புகையிரதம் இன்று காலை தடம் புரண்டதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதனால், ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சேவைகளை விரைவாக மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.