Month: February 2023

இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கை!

இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹிம்ச்சல் – உத்தரகாண்ட் பகுதிகளில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய…

கவிதாயினி மேகா மிர்சா எழுதிய புல் ஏந்தா பனித்துளிகள் கவிதை நூல் வெளியீட்டு விழா!

(அபு அலா) தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) ஏற்பாட்டில் அட்டாளைச்சேனையின் பெண் கவிதாயினி மேகா மிர்சா எழுதிய புல் ஏந்தா பனித்துளிகள் கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவு கூட்ட…

கொக்கட்டிச்சோலையில் மீட்கப்பட்ட மோட்டர்குண்டு செயலிழக்க வைப்பு

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை, கண்டியனாறு குளப்பகுதியை அண்டிய காட்டுப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் குண்டொன்று நேற்றைய தினம் (23.02.2023) மீட்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குறித்த மோட்டார் குண்டை விசேட அதிரடிப்படையினர் செயலிழக்க வைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சோதனை நடவடிக்கை விசேட அதிரடிப்படைக்கு…

மாணவியின் அந்தரங்க படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டு – இளைஞனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவிட்ட கல்முனை நீதிவான் நீதிமன்று

பாடசாலை மாணவியின் நிர்வாணப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான காதலர் என கூறப்படும் சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள்…

யானைக்கு தொடர்ந்தும் பலியாகிய மற்றுமொரு குடும்பஸ்தர்: இருவர் தீவிர சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில்..

யானைக்காவலுக்காக சம்மாந்துறை பெரிய கொக்கனாரை வட்டை பகுதிக்கு சென்ற மூன்று நபர்களை இன்று (24) அதிகாலை யானை தாக்கியுள்ளது. யானை தாக்கியதில் ஒரு நபர் சம்பவ இடத்துலேயே உயிரிழந்ததோடு இருவர் வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யானை தாக்குதலுக்கு 55 வயதுடைய…

க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தற்போதைக்கு பரீட்சை தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவை அதிகரித்து வழங்க அமைச்சரவைப் பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அதற்கான சுற்றுநிரூபம் வௌியிடப்படும் என்றும் கல்வி…

சபையை விட்டு திடீரென வெளியேறிய ஜனாதிபதி ரணில்!

தேர்தலை நடத்துமாறு கோரி எதிர்கட்சியினர் நாடாளுமன்றம் மத்தியில் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் விஷேட உரையாற்றியிருந்தார். தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலுக்கு சட்ட ரீதியாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும்,…

ஏனைய பரீட்சைகளும் ஒத்திவைக்கப்படும் – ஜோசப் ஸ்டாலின்

உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இலங்கையில் பரீட்சை அட்டவணை திட்டமிடல் மேலும் தாமதமாகும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில்,…

எதிர்வரும் வாரத்தில் இந்தியாவிற்கு பயங்கர நிலநடுக்கம்..?

எதிர்வரும் வாரத்தில் இந்தியாவின் ஹிம்ச்சல் – உத்தரகண்ட் மாநிலங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் என இந்திய நிலநடுக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் (National Geophysical Research Institute (NGRI) தலைவர் பூர்ணசந்திர ராதி (N Purnachandra Rao) இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு பணிப்பகிஷ்கரிப்பு

அரசாங்கத்தினால் தம்மால் முன்வைக்கப்பட்ட 08 கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் காலை 08 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த…