தேர்தலை நடத்துமாறு கோரி எதிர்கட்சியினர் நாடாளுமன்றம் மத்தியில் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் விஷேட உரையாற்றியிருந்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலுக்கு சட்ட ரீதியாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும், தேர்தலை நடத்துவதற்கு போதுமான நிதியில்லையெனவும் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும் எதிர்கட்சியினர் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான விவாதம் ஒன்றை நடத்துமாறு கோரியதாக தெரிவித்த ஜனாதிபதி, தேர்தலை காலம் தாழ்த்தவும் இல்லை, காலம் தாழ்த்துவதற்கு தேர்தல் ஒன்றும் இல்லை எனவும் தெரிவித்தார்.