அரசாங்கத்தினால் தம்மால் முன்வைக்கப்பட்ட 08 கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் காலை 08 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இந்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு நாடளாவிய ரீதியில் 30 தொழிற்சங்கங்கள் ஆதரவை தெரிவித்துள்ளதாகவும் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.