QR முறைமை நிறுத்த முடிவில்லை: அமைச்சர்

எரிபொருள் விநியோகத்துக்கான தேசிய பாஸ் QR முறையை ஏப்ரல் 10 முதல் இடைநிறுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டை படிப்படியாக அதிகரிக்க தரவு பகுப்பாய்வு செய்யப்படும் அத்துடன் அடுத்த சில மாதங்களில் நிதி அமைச்சு மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து…

மனித உரிமைகள் பேரவை அமர்வு இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் இன்று (27) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் குழு கூட்டமும் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கூட்டத்தின் போது இலங்கை விவகாரங்கள்…

உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வு!

உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இன்று ஒழுங்கு செய்யப்பட்டது. இந் நிகழ்வானது வைத்தியசாலை பணிப்பாளர் Dr இரா. முரளீஸ்வரன் தலைமையில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது இதில் பிரதிப் பணிப்பாளர்…

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் விரைவில் மின் வெட்டு ஏற்படும் அபாயம்

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் விரைவில் மின்வெட்டு நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக மின் பொறியிலாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரட்ன தெரிவித்துள்ளார். நாள்தோறும் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் ஓரளவு மின்சாரத்தை சேமிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு மின்வெட்டு…

காரைதீவில் டெங்கு பரிசோதனை நிகழ்ச்சியும், நுளம்பு ஒழிப்பு முறை பற்றிய பொதுமக்களுக்கு விழிப்பூட்டலும்!

நூருல் ஹுதா உமர் தேசிய டெங்கு தடுப்பு பிரிவின் தேசிய நுளம்பு ஒழிப்பு நிகழ்ச்சிக்கு அமைவாக டெங்கு பரிசோதனை நிகழ்ச்சியும், நுளம்பு ஒழிப்பு முறை பற்றிய பொதுமக்களுக்கு விழிப்பூட்டலும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ்…

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 25.02.2023 நேற்று ஆரம்பமாகியது. 28 ஆம் திகதி 1008 சங்காபிசேஷகம் 03.03.2023 வெள்ளி வேட்டைத்திருவிழா 04.03.2023 மாம்பழத்திருவிழா 05.03.2023 சப்புறத்திருவிழா 06.03.2023 மாசி மக தீர்த்தோற்சவம் 07.03.2023 மீனாட்சி அம்மை சுந்தரேசுவரப்…

கல்வி அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி கவிரட்ன கோரிக்கை விடுத்துள்ளார். சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிடம் எழுத்து மூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். அமைச்சருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.…

கொழும்பு மற்றும் எல்ல பகுதிக்காக டிக்கெட் தொகை அதிகரிப்பு – அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்

கொழும்பு மற்றும் எல்ல பகுதிக்கு இடையில் இயங்கும் எல்ல ஒடிஸி ரயிலுக்கான டிக்கெட்டுகளை 5,000 ரூபாய்க்கு ரயில் திணைக்களம் விற்பனை செய்து வருகின்றது. இந்த நிலையில் ​​தனியார் நிறுவனம் ஒன்று தாம் ரயில் சேவை தொடங்குவதாக கூறி ஒரு டிக்கெட்டை 36,000…

புதிய முறைமை மூலம் நீர்க்கட்டணத்தை செலுத்தும் முறை

நீர் கட்டணப் பட்டியலை வழங்கும் சந்தர்ப்பத்திலேயே அதற்கான கட்டணத்தை அறவிடும் புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னோடித் திட்டத்தை வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இப் புதிய செயற்றிட்டம் எதிர்வரும்…

ஹெரோயின் வலைப்பின்னல் முகவர் 57 நாட்களின் பின்னர் கைது

பாறுக் ஷிஹான் ஆடம்பர வாகனங்கள் ஊடாக ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்த குழுவினர் என சந்தேகிக்கப்பட்ட நபர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதாகி இருந்த நிலையில் தலைமறைவாகி தப்பி சென்ற ஏனைய முக்கிய…