உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இன்று ஒழுங்கு செய்யப்பட்டது.

இந் நிகழ்வானது வைத்தியசாலை பணிப்பாளர் Dr இரா. முரளீஸ்வரன் தலைமையில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது இதில் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் dr.ஜெ.மதன், பொது வைத்திய நிபுணர் dr.நா. இதயகுமார், மயக்க மருந்து நிபுணர் dr.மியூரி மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் தோ.தேவஅருள் ஆகியோருடன் ஊடகவியலார் த.சகாதேவராஜா அவர்களும் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார் இங்கு விசேட அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சை நிபுணர் Dr.அகமட் இக்பால் கலந்து கொண்டு கௌரவிக்கப்பட்டதுடன் சிறப்பான நிகழ்த்துகை ஒன்றினையும் காட்சிப்படுத்தியிருந்தார்.