நீர் கட்டணப் பட்டியலை வழங்கும் சந்தர்ப்பத்திலேயே அதற்கான கட்டணத்தை அறவிடும் புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னோடித் திட்டத்தை வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இப் புதிய செயற்றிட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செயற்றிட்டம்

மீட்டர் ரீடர் (Reader) மூலம் தண்ணீர் கட்டணம் வழங்கப்படும் அதேநேரத்தில், கடனட்டை அல்லது பற்று அட்டை மூலம் கட்டணத்தை செலுத்தும் புதிய செயற்றிட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

அச்சிடப்பட்ட குடிநீர் கட்டணங்களுக்குப் பதிலாக இ-பில்களை வழங்குவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.

You missed