கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி கவிரட்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிடம் எழுத்து மூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

அமைச்சருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்ற அமர்வுகளின் போது மிகவும் இழிவான வார்தைகளை பயன்படுத்தி தம்மை அவதூறு செய்ததாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மீது அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அமைச்சரின் இந்த கருத்து சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதாகவும் ஒர் தாயாகவும், பெண்ணாகவும் தமக்கு இதனால் பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்களின் மூலம் நாடாளுமன்றம் தொடர்பில் மக்களின் நன்மதிப்பு பாதிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் கடிதத்தில் கோரியுள்ளார்.