Month: January 2023

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் கடமையை பொறுப்பேற்றார்

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட அகிலா கனகசூரியம் நேற்று திங்கட்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநரிடமிருந்து நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்ட இவர், மாகாணக் கல்வி அலுவலகத்தில் தனது கடமையையும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

எரிபொருளின் விலைகள் குறைப்பு

நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளைக் குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் விலையை 15 ரூபாயாலும் மண்ணெண்ணெயின் விலையை 10 ரூபாயாலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனைய எரிபொருட்களின் விலைகளில்…

4 ஆயிரமாக குறைக்கும் உள்ளூராட்சி மன்ற திட்டம்; சிறுபான்மை பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்கின்ற திட்டம் – பழைய முறையிலான விகிதாசார முறையே சிறந்தது— நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்—

(கனகராசா சரவணன்) நாட்டிலுள்ள 8 ஆயிரம் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை 4 ஆயிரமாக குறைக்கும் திட்டம்; மிக குளறுபடியான திட்டம் இந்த திட்டத்தில் எங்களுடைய பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்கின்ற திட்டமாகும். எனவே பழைய முறையிலான விகிதாசார முறையே சிறந்தது என தமிழ்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச்சில்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான வர்த்தமானி இந்த வாரம் வெளியிடப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிடுகிறது. வர்த்தமானி வெளியிடப்பட்டு பதினான்கு நாட்களின் பின்னர் மூன்று நாட்களுக்குள் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அதன் தலைவர் சட்டத்தரணி நிமல்…

மின்சாரக்கட்டண அதிகரிப்புக்கு சட்டமா அதிபர் சாதக சமிஞ்சை

தொழில்துறைக்கான பொதுவான கொள்கை வழிகாட்டுதல்களை வகுக்க மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு சட்டம் முழு அதிகாரம் அளித்துள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ள நிலையில் மின்சாரத் துறை கட்டுப்பாட்டாளர்களின் ஆட்சேபனைகளை நிராகரித்து, சராசரியாக 65 சதவீத கட்டண உயர்வை அரசாங்கம் அறிவிக்கவுள்ளது. இது…

உள்ளூராட்சி சபை தேர்தல்: வேட்புமனு பொறுப்பேற்கும் தினம் குறித்த அறிவிப்பு புதன்கிழமை

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்புமனு பொறுப்பேற்கும் தினம் தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு நாளை மறுதினம் (04) அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நாளைய தினம் இடம்பெறவுள்ளது. இதன்போது வேட்பு மனுவை பொறுப்பேற்கும் தினம் குறித்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.…

கருணை காட்டுமா அமெரிக்கா….! மனைவியுடன் பரிதவிக்கும் கோட்டபாய

அமெரிக்காவில் மீண்டும் குடியுரிமை பெற்றுக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முயற்சித்து வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது குடும்பத்துடன் டுபாயில் தங்கியுள்ள கோட்டாபய அங்கிருந்து அமெரிக்கா செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அமெரிக்க குடியுரிமையை மீள வழங்குமாறு…

இலங்கையில் அறிமுகமாகும் புதிய வகை சாரதி அனுமதி பத்திரம்

இலங்கை ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கும் ஒவ்வொரு ஓட்டுனருக்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, இந்த ஆண்டு முதல் QR குறியீட்டுடன் கூடிய புதிய ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் குஸலானி டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போது இலங்கையர்களுக்கு…

முட்டை விலையை குறைக்க முடியும்..! வெளியிடப்பட்டுள்ள தகவல்

முட்டைகளை இறக்குமதி செய்வதன் மூலம் விலையை குறைக்க முடியும் என பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அல்லது இந்தியாவிடமிருந்து முட்டை இறக்குமதி செய்ய முடியும் என அவர் பரிந்துரை செய்துள்ளார். பேக்கரி உற்பத்திகளின் விலை இவ்வாறு முட்டை…

தொடர்ந்து உடையும் பொதுஜன பெரமுன கட்சி – மேலும் 2 MP க்கள் தனித்து இயங்க திட்டம்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க மற்றும் ஜகத் குமார ஆகியோர் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களுடன் மேலும் ஒரு குழு எம்.பி.க்கள் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்கள்…