உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான வர்த்தமானி இந்த வாரம் வெளியிடப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிடுகிறது.

வர்த்தமானி வெளியிடப்பட்டு பதினான்கு நாட்களின் பின்னர் மூன்று நாட்களுக்குள் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.