ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க மற்றும் ஜகத் குமார ஆகியோர் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களுடன் மேலும் ஒரு குழு எம்.பி.க்கள் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த இரண்டு எம்.பி.க்களும் சமீபத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கையை விமர்சித்ததுடன் பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

இனி வரும் தேர்தலில் இப்படி சென்று மக்களை சந்திக்க முடியாது என்று கட்சி தலைவர்களிடம் கூட கூறியுள்ளனர்.