இலங்கை ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கும் ஒவ்வொரு ஓட்டுனருக்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய, இந்த ஆண்டு முதல் QR குறியீட்டுடன் கூடிய புதிய ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் குஸலானி டி சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையர்களுக்கு நான்கு வகையான ஓட்டுநர் உரிமங்கள் உள்ளதெனவும் அவர் குஸலானி டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த ஓட்டுநர் உரிமங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்படும் போது, ​​புதிய QR குறியிடப்பட்ட ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த வருடத்தில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்படும் புதிய வேலைத்திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்ட முறைமை குறித்து நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அமைச்சர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.