அமெரிக்காவில் மீண்டும் குடியுரிமை பெற்றுக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முயற்சித்து வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போது குடும்பத்துடன் டுபாயில் தங்கியுள்ள கோட்டாபய அங்கிருந்து அமெரிக்கா செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அமெரிக்க குடியுரிமையை மீள வழங்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறையிடம் தனது வழக்கறிஞர்கள் மூலம் கோட்டாபய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2019ஆம் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கில் அமெரிக்க குடியுரிமையை நீக்கியிருந்தார்.

இந்நிலையில் அதனை மீண்டும் பெற்றுக்கொள்ள கோட்டபாய முயற்சித்து வரும் நிலையில் அமெரிக்க அதிகாரிகளால் இன்னும் பரிசீலிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.