Author: Kalminainet01

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு பணிப்பகிஷ்கரிப்பு

அரசாங்கத்தினால் தம்மால் முன்வைக்கப்பட்ட 08 கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் காலை 08 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த…

நாட்டில் சில இடங்களில் இன்று மழை

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக மழையற்ற வானிலை நிலவுமென…

மனநிலை பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் நிலையம் திறந்து வைப்பு!

(அபு அலா) 18 வயதுக்குட்பட்ட பால்நிலையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் இல்லத்து வன்முறையினால் மன உளைச்சலுக்கு உள்வாங்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் கூடிக்கொண்டே செல்கிறது. அதிலிருந்து அவர்களை விடுபட வைப்பதற்கான பல முயற்சினை நாம் முன்னெடுத்து வருகின்றோம் என்று திருமலை மாவட்ட பெண்கள்…

கல்முனை வலயக் கல்வி அலுவலக அதிபர் சங்கக் கூட்டமும், நிருவாகத் தெரிவும் -2023

நூருல் ஹுதா உமர் கல்முனை வலய அதிபர் சங்கக் கூட்டம் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் தலைமையில் செவ்வாய்க்கிழமை (21) வலய கல்வி அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது நடப்பாண்டிற்கான நிருவாகத் தெரிவு இடம் பெற்றது. இத்தெரிவில் தலைவராக…

இன்று இலங்கையில் மீண்டும் ஒரு சிறு நிலநடுக்கம்

புத்தல மற்றும் வெல்லவாய பிரதேசங்களுக்கு அண்மித்த பகுதிகளில் இன்று முற்பகல் 11.44 மணியளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் அகழ்வு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 3.2 ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைத்திரியின் மனு மீதான தீர்ப்புக்கு திகதி அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு…

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நேற்று(செவ்வாய்கிழமை) இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வட மாகாணம் மற்றும் கொழும்பை சேர்ந்த 21 பேரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப்…

நான்கில் ஒருவருக்கு நீரிழிவு – புதிய ஆய்வு

இலங்கையில் உள்ள வயது வந்தவர்களில் நான்கில் ஒருவருக்கு (23%) நீரிழிவு நோய் உள்ளதுடன், மூவரில் ஒருவருக்கு (31%) உயர் இரத்த சர்க்கரை அளவு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில இலங்கை பல்கலைக்கழகங்கள், அவர் கொழும்பில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI)மற்றும்…

நடு வீதியில் மோதிக்கொண்ட இராணுவ அதிகாரிகள்! இராணுவ தரப்பின் அறிவிப்பு

நெலும்பொகுன திரையரங்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் எல்.எஸ்.பாலச்சந்திர மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு படை கட்டளைத் தலைமையகத்தை சேர்ந்த பிரிகேடியர் சுரேஷ் பெரேரா ஆகியோர் வாகனங்களில் செல்லும் போது வீதியில் ஏற்பட்ட மோதலையடுத்து தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இராணுவ…

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய நடைமுறை அறிமுகம்

இலங்கை சுற்றுலா துறையை ஊக்குவிப்பதற்காக பயண அட்டை (Travel Card) ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பயண அட்டை அறிமுகம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் நடத்தப்பட்டுள்ளது. இந்த அட்டையை வழங்கிய பின்னர்,…