Author: Kalminainet01

உக்ரைன் போரில் இதுவரை 19ஆயிரம் பேர் பாதிப்பு: ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம்!

உக்ரைனில் கடந்த பெப்ரவரி மாதம் தொடங்கிய போரில் இருந்து கிட்டத்தட்ட 19,000 பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதில் 7,199 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 11,756 பேர் காயமடைந்தனர். கனரக…

ஹெரோயின் வலைப்பின்னல் முகவர் 57 நாட்களின் பின்னர் கைது

பாறுக் ஷிஹான் பொலிஸார் முன்னிலைப்படுத்திய போது 5 நாட்கள் (120 மணித்தியாலங்கள்) தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டதுடன் ஏனைய இச்சம்பவத்துடன் தொடர்பு பட்டு தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகளையும் கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். சம்பவத்தின் பின்னணி அம்பாறை…

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பதவிக்காக 50 பேரை புதிதாக இணைக்கும் அரசாங்கம்!

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பதவிக்காக 50 பேரை புதிதாக பயிற்சிக்கு இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அண்மையில்…

இலங்கையில் வங்கிகளின் பணப்புழக்க நிலை! மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ள விடயம்

வங்கித் தொழிலை பாதுகாப்பதற்கு நாம் இருக்கிறோம் என்ற செய்தியை தெரிவிக்க விரும்புவதாக இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உறுதியளித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் (20.02.2023) தொழில்சார் வங்கியாளர் சங்கங்களின் 33ஆவது ஆண்டு நிறைவு மாநாடு இடம்பெற்றிருந்தது. இதில்…

ஆரம்பமாகியது இன்றைய தினத்திற்கான நாடாளுமன்ற அமர்வு

நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் 24ஆம் திகதி வரை முன்னெடுக்க நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு தீர்மானித்துள்ளது. இந்த விடயத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகம்…

திருக்கோவில் பிரதேசத்தில் வெள்ளம்-களத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர்

தற்போது நாட்டில் பெய்துவரும் மழையுடன் கூடிய காலநிலையால் நாட்டில் பலபாகங்களிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டு வருகின்றது. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் பெய்துவரும் அடை மழையுடன் கூடிய காலநிலையால் விவசாய நிலங்கள் உள்ளிட்ட பல இடங்களிலும் வீடுகளிலும் வெள்ள…

மட்டக்களப்பு RDHS ஏற்பாட்டில் வெற்றிகரமாக நேற்று இடம் பெற்ற தொழுநோய் தொடர்பான கருத்தரங்கு

மாவட்ட தொழுநோய் கருத்தரங்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம், தொழு நோய்க்கான இலங்கையிலுள்ள அமைப்புகள், பிரித்தானிய தொழுநோய் அமைப்பு போன்றவற்றுடன் இணைந்து மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை நேற்று வெற்றிகரமாக நடத்திமுடித்தது. மட்டக்களப்பில் கடந்த…

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவிற்கு பிணை!

அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதன்படி, சரண குணவர்தனவை 30,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டது.…

கல்முனையில் மற்றொரு இன முறுகல்!

கிழக்கின் முக்கிய மாநாகரப் பிரதேசமான கல்முனை மாநகரில் மற்றுமொரு தமிழ் – முஸ்லிம் முறுகல் நிலையைத் தோற்றுவிக்கும் செயற்பாடொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பான்மை தமிழ் மக்கள் வாழும் கல்முனை மாநகரில் அமைந்துள்ள கல்முனை பொது நூலகத்திற்குப் பெயரிடும் விடயமே தமிழ்…

எட்டி உதைத்ததில் கரு கலைந்தது: சிப்பாய் கைது

பிறந்தநாள் விழாவின் போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், கணேமுல்ல அமுனுகொட வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. உதைக்கு இலக்கான நான்கு மாத கர்ப்பிணிப் பெண், பொரளை டி சொய்சா வைத்தியசாலையில்…