நூருல் ஹுதா உமர்

கல்முனை வலய அதிபர் சங்கக் கூட்டம் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் தலைமையில் செவ்வாய்க்கிழமை (21) வலய கல்வி அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது நடப்பாண்டிற்கான நிருவாகத் தெரிவு இடம் பெற்றது.

இத்தெரிவில் தலைவராக நிந்தவூர் அல்- மஸ்லம் வித்தியால அதிபர் இஸட். அஹமட், செயலாளராக கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய அதிபர் ஏ.ஜி.எம். றிசாத், பொருளாளராக கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை அதிபர் கலையரசன் ஆகியோரும் சபையினரால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் காரைதீவு சண்முகா மகா வித்தியாலய அதிபர் எஸ். மணிமாறன் உப – தலைவராகவும், சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய அதிபர் யூ.எல். நஸார் உப – செயலாளராகவும் அமைப்பின் நிருவாக சபை உறுப்பினர்களாக நிந்தவூர் கல்வி கோட்டத்தின் சார்பில் நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை அதிபர் ஏ.எல். நிஸாமுத்தீன், நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலய அதிபர் ஏ.சி. ஹாமிது ஆகியோரும், காரைதீவு கல்விக் கோட்டம் சார்பில் காரைதீவு விஷ்ணு வித்தியாலய அதிபர் திருமதி: K. தம்பிராஜா மற்றும் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி அதிபர் எம். சுந்தர ராஜா ஆகியோரும், சாய்ந்தமருது கல்வி கோட்டம் சார்பில் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் அதிபர் எம்.ஐ. சம்சுதீன், சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் ஆகியோரும், கல்முனை கல்வி கோட்டம் சார்பில் கல்முனை அல்- அஸ்ஹர் வித்தியாலய அதிபர் ஏ.எச். அலி அக்பர், மருதமுனை புலவர்மணி சரிபுத்தீன் மகா வித்தியாலய அதிபர் எம்.எம்.எம். நியாஸ், கல்முனை ராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலய அதிபர் வீ. நந்தபாலா, கல்முனை சிறி மாமாங்க மகா வித்தியாலய அதிபர் திருமதி: அருள்ஞானம் மூர்த்தி ஆகியோரும் சபையினரால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட புதிய தலைவர் அடங்கிய செயறக்குழுவினர் எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளை புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்ட நிந்தவூர் அல்- மஸ்லம் வித்தியால அதிபர் இஸட். அஹமட் சபையில் முன்வைத்தார்.


Warning: Undefined variable $post in /home/kalmowix/public_html/wp-content/themes/newsup/inc/ansar/hooks/hook-index-main.php on line 117