இலங்கை சுற்றுலா துறையை ஊக்குவிப்பதற்காக பயண அட்டை (Travel Card) ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பயண அட்டை அறிமுகம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் நடத்தப்பட்டுள்ளது.

இந்த அட்டையை வழங்கிய பின்னர், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலாத் துறையில் பல்வேறு சேவைகளை வழங்குபவர்கள் சுற்றுலாப் பயணிகளைக் கையாள்வதில் சிறப்புச் சலுகைகளைப் பெறுவார்கள்.

மேலும், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுதல், தாங்கள் கொண்டு வரும் டொலர்களை வங்கியில் நேரடியாகப் பரிமாற்றம் செய்தல் போன்ற தரமான சேவைகளைப் பெற முடியும்.

அத்துடன், சுற்றுலாப் பயணிகள் இந்த அட்டை மூலம் இலங்கையில் பொருட்களையும் சேவைகளையும் பாதுகாப்பாகப் பெற முடியும்.