முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி தமக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நிராகரித்து அந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மைத்திரிபால சிறிசேன இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட இருந்த போதிலும் மேல்மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவை வெளியிடுவதை மார்ச் 1ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.