கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் மூன்றாவது தடவையாகவும் கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட வீதியோர பணியில் ஈடுபட்டு நகரைத் துப்பரவு செய்கின்ற தொழிலாளர்கள் மற்றும் பாதணிகளை செப்பமிடும் தொழிலாளர்களும் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கான உலர் உணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வானது 2025.12.30 கல்முனை மெதடிஸ்த திருச்சபையில் திருச்சபையின் முகமைக்குழு அருட்திரு S. ரவி முருகுப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை கிறிஸ்த இல்ல பொறுப்பாளரான அருட் செல்வி A. சுலோஜினி அருட் சகோதரி T. அதிர்ஷ்டவதி அருட் சகோதரன் S. இளங்கோவன் ஆகியோரும் திருச்சபையின் சேகர உக்காரணக்காரர் J.B. பத்தலேமியூஸ் சபை உக்ராணக்காரர் T. டினேஷ் ஆகியோருடன் திருச்சபை மக்களும் கலந்து கொண்டனர்.

. கல்முனை மெதடிஸ்த திருச்சபை கடந்த 2023ம் ஆண்டு தொடக்கம் வீதி யோர துப்புரவு பணியில் ஈடுபடுகின்ற தொழிலாளர்களையும் வீதியோர பாதிணிகளை செப்பமிடும் தொழிலாளர்களையும் ஆலயத்துக்குள் அழைத்து அவர்களை கௌரவித்து சிற்றுண்டிகள் வழங்கி உலர் உணவுப் பொருட்களையும் கொடுத்து வருகின்றது இந்த மகத்தான புனிதமான பணி தொடர்ச்சியாக இடம்பெறும் என கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் முகாமை குரு கூறினார்.