நெலும்பொகுன திரையரங்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் எல்.எஸ்.பாலச்சந்திர மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு படை கட்டளைத் தலைமையகத்தை சேர்ந்த பிரிகேடியர் சுரேஷ் பெரேரா ஆகியோர் வாகனங்களில் செல்லும் போது வீதியில் ஏற்பட்ட மோதலையடுத்து தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 15ஆம் திகதி தம்புள்ளையில் உள்ள இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை படைப்பிரிவில் நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற போது இந்த அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அதிகாரிகள் இருவரும் பதவி நீக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு வழங்கப்படும் பல வசதிகளும் குறைக்கப்பட்டுள்ளன.