உலக நீரிழிவு தினத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விழிப்புணர்வு சைக்கிள் அணிவகுப்பு!

ஒவ்வொரு வருடமும் உலக சுகாதார அமைப்பினால் கார்த்திகை மாதம் 14ம் திகதி உலக நீரிழிவு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.அந்த வகையில் பொது மக்களுக்கு நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் சைக்கிள் அணிவகுப்பு ஒன்று இன்று நடைபெற்றது.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr இரா முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றதுடன் இதில் பிரதி வைத்திய அத்தியட்சகர் Dr. மதன் உட்பட வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினரகள் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் வைத்தியசாலையின் சுகாதார கல்விப்பிரிவினால் துண்டுப் பிரசுரங்களும் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

You missed