78 வது சுதந்திர தினக் கொண்டாட்டம் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்படுகின்ற ஒத்தகை நிகழ்வுகள் காரணமாக கொழும்பு பிதேசத்தில் வசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்றை நடைமறைப்படுத்தியுள்ளது என்று பிரதி பொலிஸ்மா அதிபர், டப்லியு. பீ. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

78 வது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டம் எதிர்வரும் 2026 பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு கடந்த 30 ஆம் திகதி ஒத்தகை நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், இன்றும் ஒத்திகை நிகழ்வுகள் இடம்பெறுகின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒத்திகை இடம்பெறும் தினங்கள் மற்றும் 2026 பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று, கொழும்பு பகுதியில் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், மாற்று பாதைகளைப் பயன்படுத்தும் வகையில் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

ஒத்திகைகளுக்காக இன்று காலை 07.45 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும், 2026 பெப்ரவரி 4 அதிகாலை 05.00 மணி முதல் சுதந்திர தின கொண்டாட்டங்கள் முடிவடைடையும் வரை கொழும்பு பகுதியில் விசேட போக்குவரத்து கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படும்.

அதன்படி, நிதஹஸ் மாவத்தை, ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தை, பௌத்தலோக மாவத்தை, விஜேராம மாவத்தை, மைட்லேண்ட் கிரசென்ட், ஹோர்டன் பிளேஸ் உள்ளிட்ட சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள பல முக்கியவீதிகளில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும்.

விசேடமாக 2026 பெப்ரவரி 04 ஆம் திகதி அதிகாலை 03.00 மணி முதல் தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் முடியும் வரை இந்த சாலைகளில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும், இந்த நாட்களில் போக்குவரத்து தடைசெய்யப்படும் வீதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தேவைகளுக்காக பயணிக்க தடை இல்லாத வகையில் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.