(கல்முனை ஸ்ரீ)
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல பிரதேசங்களில்
முறையாக குப்பபைகள் அகற்றப்படாமையினால் பொது மக்கள்
பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதுடன் குப்பபைகள்
கொட்டப்படும் இடங்களில் துர்நாற்றம் வீசுவதால் நோய்கள்
பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கல்முனை 1,2,3ம் குறிச்சிகளில் குப்பைகள் அகற்றுவது
முறையாக இடம்பெறுவதில்லையெனவும் ஏனைய பிரதேசங்களில்
கிரமமாக குப்பைகள் அகற்றப்படுகின்றபோதிலும் கல்முனை
மாநகர சபை பாராமகமாக இருந்து இப்பிரதேசங்களை
புறக்கணிப்பதாகவும் வரியிறுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்முனை நகர் பிரதேசத்தில் கிரமமாக குப்பை அகற்றும்
நடவடிக்கை இடம்பெறுவதுடன் நகரை அண்டிய மேற்படி
பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் இருத்தல் திட்டமிட்டு
மேற்கொள்ளபடுகின்றதா என்ற சந்தேகம் இப்பிரதேச மக்களுக்கு
உள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
திட்வா சூறாவளிக்கும் பின்பு இரு தடவைகள் மாத்திரமே இப்
பகுதியில் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் குப்பலகைள் அகற்றும் நடவடிக்கை இடம்பெறாததால் வீதிகளிலும் இவ்வருடம்
வீட்டு வளவுகளிலும் குப்பைகள் நிறைந்து துர்நாற்றம் வீசுவதுடன்
நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும்
இப்பிரதேச மக்கள் சகாதார தரப்பினர் இது தொடர்பாக கூடிய
கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
