Month: September 2022

பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 4 ஆம் திகதி இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இதேவேளை க.பொ.த உயர்தரப் பரீட்சை டிசம்பர் 5 முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2 வரை திகதி வரை நடைபெறும்…

இலங்கை சட்டக் கல்லூரிக்கான விண்ணப்பம் கோரல்!

இலங்கை சட்டக் கல்லூரிக்கு பிரவேசிப்பதற்கான பொது நுழைவு பரீட்சைக்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி கோரப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கை சட்டக் கல்லூரி தெரிவித்துள்ளது.…

லிட்ரோ எரிவாயு விலை குறைகிறது..!

சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலையை100 ரூபாவிற்கும் 200 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு முன்னெடுக்கப்படுமென நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.…

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்!

2021-2022 கல்வி ஆண்டுகளுக்கான பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க நேற்று தெரிவித்திருந்தார். எதிர்வரும் 23ம் திகதி வரையில் இதற்காக விண்ணப்பிக்க முடியும். 2021-2022 கல்வியாண்டிற்காக 42 ஆயிரத்து…

மோசமான காலநிலை அவதானம் தேவை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலிய, காலி, மாத்திறை ஆகிய மாவட்டங்களில் 100 மில்லி மீட்டருக்கு அதிகமான மழை வீழ்ச்சி காணப்படும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் சில பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் எனவும்…

டிஜிட்டல் வடிவில் பிறப்புச் சான்றிதழ்: ஆட்பதிவுத் திணைக்களம் தகவல்…!

தேசிய பிறப்புச் சான்றிதழை டிஜிட்டல் வடிவில் வழங்கும் செயற்றிட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. 2022 ஒகஸ்ட் 1ஆம் திகதிக்குப் பின்னர் பிறந்த குழந்தைகள் டிஜிட்டல் வடிவில் பிறப்புச் சான்றிதழ்களைப் பெறுவார்கள் என பதிவாளர் ஜெனரல் பிரபாத் அபேவர்தன…

பொருளியல் துறையில் கலாநிதி பட்டம் பெற்றார் ஏ.எல்.எம்.அஸ்லம்

(அஸ்லம் எஸ்.மெளலானா) இலங்கை திட்டமிடல் சேவையின் சிரேஷ்ட அதிகாரியான ஏ.எல்.முஹம்மட் அஸ்லம் பேராதனை பல்கலைக் கழகத்தில் பொருளியல் துறையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே இத்துறையில் தத்துவ முதுமாணிப் பட்டத்தை பெற்றுள்ள இவர் தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் பொருளியல்…

அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தால் போராட்டத்துக்கு அழைப்பு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட மூவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பாரிய போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 8…

எரிபொருள் விநியோகத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

எரிபொருள் விநியோகத்தை மேலும் டிஜிட்டல் மயப்படுத்துவது தொடர்பில் மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சியசாலை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. எரிபொருள்…

அதிகரிக்கப்படவுள்ள தொலைபேசி கட்டண விபரங்கள்

தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டது – புதிய விலை விபரங்கள் வெளியாகின தொலைபேசி கட்டணத்தை அதிகரிப்பதற்கு தொலைபேசி சேவை வழங்குனர்களுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நிலையான தொலைபேசி, கையடக்க தொலைபேசி மற்றும் செய்மதி…

You missed