தேசிய பிறப்புச் சான்றிதழை டிஜிட்டல் வடிவில் வழங்கும் செயற்றிட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

2022 ஒகஸ்ட் 1ஆம் திகதிக்குப் பின்னர் பிறந்த குழந்தைகள் டிஜிட்டல் வடிவில் பிறப்புச் சான்றிதழ்களைப் பெறுவார்கள் என பதிவாளர் ஜெனரல் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழுக்கான திட்டம் இறுதியில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

குழந்தை 15 வயதை அடையும் போது, ​​டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழில் அவர்களின் பெயருக்கு அடுத்ததாக பட்டியலிடப்பட்ட எண் அவர்களின் தேசிய அடையாள அட்டை எண்ணாக காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


Warning: Undefined variable $post in /home/kalmowix/public_html/wp-content/themes/newsup/inc/ansar/hooks/hook-index-main.php on line 117