Category: பிரதான செய்தி

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – இதுவரை 06 அரசியல் கட்சிகளும், 10 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தின

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக நேற்று(திங்கட்கிழமை) வரை அங்கீகரிக்கப்பட்ட 06 அரசியல் கட்சிகளும், 10 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. கொழும்பு, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தேர்தல் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்…

இலங்கையை எடுத்துக்காட்டி ஜனாதிபதி வெளியிட்ட கடும் கண்டனம்

பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் இடம்பெற்றுவரும் அண்மைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்புக்கு முரணான வழிமுறைகள் மூலம் ஜனநாயகக் கட்டமைப்புகளைத் தூக்கி எறிவதற்கான குழுக்களின் இதே போன்ற முயற்சிகளை இலங்கையும் வெகுகாலத்திற்கு முன்பு…

போர் பதற்றத்திற்கு மத்தியிலும் இலங்கை வரும் உக்ரேன் கப்பல்

உக்ரைனில் இருந்து இலங்கைக்கு 49500 தொன் கோதுமை ஏற்றிய கப்பல் உக்ரைன் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டதாக கூட்டு ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர சோளம், கடலை, சூரியகாந்தி விதைகளை ஏற்றிச் செல்லும் மேலும் மூன்று கப்பல்கள் மூன்று நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.…

மாகாண அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்த அரசுக்கு ஒரு வார கால அவகாசம் : தமிழ் கட்சிகள் தீர்மானம்

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட மாகாண அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கு ஒருவார காலம் அவகாசம் வழங்குவதென்றும், அந்த கால அவகாசத்திற்குள் அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தாவிட்டால் அரசாங்கத்துடன் பேச்சை தொடரப்போவதில்லை என தமிழ் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இரா.சம்பந்தனின் இல்லத்தில் நேற்று (09) மாலை கூடிய…

சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்து தாய்லாந்து – இலங்கைக்கு இடையில் பேச்சுவார்த்தை

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இன்றைய தினமும் நாளைய தினமும் கொழும்பில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.…

தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவதில்லை; உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசு தனியாக வேட்புமனு: ரெலோ, புளொட்டுடன் பேசவும் முடிவு

தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் அவசரப்பட்டு தீர்மானம் எடுப்பதில்லை என்ற அதன் தலைவர் சம்பந்தனின் அறிவிப்பை உள்வாங்கி அச்செயற்பாட்டை உடனடியாக மேற்கொள்ளப்போவதில்லை என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. அத்துடன் வடக்கு, கிழக்கில்…

இலங்கையில் மீண்டும் கோவிட்

இலங்கையில் மீண்டும் கோவிட் தொற்றுக்குள்ளாவோர் இனம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி நேற்று (07.01.2023) புதிதாக நால்வர் கோவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் இனம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் இதுவரை 671927 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்திடம் மகிந்த விடுக்கும் கோரிக்கை

மின்சாரக் கட்டணத்தை கணிசமான சதவீதத்தினால் அதிகரிப்பதை மீள்பரிசீலனை செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலம் முழுவதும் வரி மற்றும்…

டொலரொன்றிற்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களினால் அனுப்பப்படும் ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் 2 ரூபா ஊக்கத்தொகை வழங்கப்படுவதை இலங்கையின் மத்திய வங்கி ஜனவரி 1 ஆம் திகதி முதல் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முறையான வங்கி வலையமைப்புக்களின் மூலம் பணம் அனுப்புவதை ஊக்குவிக்க 2021ஆம்…

இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி ரணில் வழங்கிய வாக்குறுதி

இலங்கையில் விரையில் நிலையான பலத்தை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சம்பளத்தில் வரி செலுத்தல், வற் வரி போன்ற பொருளாதாரத்தை மீட்பதற்காக நடவடிக்கைகளினால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தில்…