மார்ச் 9ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக பதிவு செய்யப்பட்ட 58 அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 80,720 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.