கல்முனையில் கோலாகலமாக நடைபெற்ற மாபெரும் இலக்கியக் விழா!
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கலாசார அலுவல்கள் திணைக்களமும் (மத்தி) இணைந்து, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் ‘பிரதேச இலக்கிய விழா – 2025’ என்ற மாபெரும் இலக்கிய நிகழ்வு (19.12.2025, வெள்ளிக்கிழமை) பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
காலை 9.30 மணி முதல் மாலை 9.00 மணி வரை நடைபெற்ற இவ்விழாவில், தமிழ் மொழி, இலக்கியம், கலை மற்றும் பண்பாட்டு மரபுகளை முன்னிறுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றிருந்தன.
விழாவின் முக்கிய அம்சமாக புத்தகக் கண்காட்சி, கல்முனை தமிழ் சங்கத்தின் இலக்கிய ஆய்வரங்கு, மார்கழி மாத பௌர்ணமி கலை விழா என பல்வேறு சிறப்பம்சங்களுடன் இடம் பெற்றன. இந் நநிகழ்வுக்கு எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றிருந்தனர்.
நிகழ்வு தொடர்பான மேலதிக விபரங்கள்






















