Category: இலங்கை

டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் பயனை மக்களுக்கு வழங்க எதிர்பார்த்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலையில் நாளைய தினம் (05) திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. எவ்வாறாயினும், விலை திருத்தம் தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. விலை திருத்தம் இடம்பெற்றாலும் பாரிய அளவில் இடம்பெறாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, டொலரின் பெறுமதி…

இன்று முதல் மழை அதிகரிப்பு

நாட்டில் இன்று முதல் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி, வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில், இடைக்கிடையே 75 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். அதேநேரம், மேல், சப்ரகமுவ மற்றும்…

வங்கிகளில் கடன் பெற்றுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை அறிவித்துள்ள மத்திய வங்கி

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இரண்டு சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக மத்திய வங்கி நேற்று அறிவித்துள்ளது. அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வரிகள் காரணமாக வங்கிகளில் கடன் பெற்று தவிக்கும் மக்களுக்காக இந்த தீர்மானம் எடுக்க்பபட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க…

தலைமன்னார் கடற்கரையில் இருந்து படகு மூலம் கச்சதீவு செல்ல நீண்ட நேரம் காத்திருந்த மக்கள்!

தலைமன்னார் கடற்பரப்பில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு பக்தர்கள் செல்வதற்கு தயாராக இருந்த போதிலும் உரிய நேரத்துக்கு கடற்படை மக்களை பயணிக்க அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் நீண்ட நேரம் தலைமன்னார் கடல் கரை…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ…

இலங்கையில் வங்கி வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை மத்திய வங்கியினால் தற்போது பேணப்படும் கொள்கை வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடரும் என Bloomberg வணிக செய்தி பிரிவு கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறும் சவாலை நிறைவேற்ற இதே முறை பின்பற்றப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.…

சமுர்த்தி பயனாளிகளின் நலன்கருதி இளைப்பாறும் கட்டடம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

அபு அலா சமூக சேவையாளர் சரவணமுத்து யோகநாயகத்தின் 4வது ஆண்டு ஞாபகார்த்த நினைவையொட்டி திருகோணமலை இலுப்பைக்குள பிரதேச சமுர்த்தி பயனாளிகளின் நலன்கருதி 4 இலட்சம் ரூபாய் நிதியில் நீர்மானிக்கப்பட்ட இளைப்பாறும் கட்டடம் திறந்து வைத்து பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று…

தொழிற்சங்கத் தலைவர்கள் பயணம் செய்ய எரிபொருள் வழங்குவது ஜனாதிபதியே! வஜிர அபேவர்தன

போராட்டங்களை நடத்துவதற்காக தொழிற்சங்க தலைவர்கள் பயணங்களை மேற்கொள்ளத் தேவையான எரிபொருட்களை ஜனாதிபதியே வழங்குவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவி வந்த வரிசைகளை இல்லாதொழித்து, போக்குவரத்து செய்ய ஜனாதிபதி எரிபொருள் வழங்கியுள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.…

நாடளாவிய ரீதியில் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம்(01) நாடளாவிய ரீதியில் ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமது சங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று(28) காலை 10 மணிக்கு விசேட மத்திய…

பாணந்துறையில் சொகுசு ஜீப்பில் இருந்த நபர் சுட்டுக்கொலை

பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் இன்று சொகுசு வாகனத்தில் வைத்து நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். காலை 08.00 மணிக்குப் பின்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், வாகனத்திற்குள் உயிரிழந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த…