(கல்முனை ஸ்ரீ)
கல்முனை மாநகர சபை எல்லைக்குள் மோட்டார் போக்குவரத்து சட்டத்தை கடுமையாக அமுலாக்கும்படி இஷட்.எம் ஸாஜீத் என்பவர் போலீஸ் மா அதிபருக்கு மகஜர் ஒன்றை அனுப்பி கோரிக்கை விடுத்துள்ளார் அவர் தனது மகஜரில் .

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் பிரதான வீதி மற்றும் கடற்கரை வீதிகளில் தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் ஏறி அதிக வேகத்தில் பயணிப்பது, போதைப் பொருள் பாவனையுடன் மோட்டார் வண்டியினை செலுத்துவது போன்ற வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பாதசாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியதாகவும், நாட்டின் சட்டத்தை பின்பற்றாமலும் நடந்து கொள்வதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக 15-30 வயதுக்கு உட்பட்டவர்களே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை காணக்கூடியதாகவுள்ளது. இவர்களில் சிலருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் இருப்பதையும் அறிய முடிகிறது.

நீலாவனை,கல்முனை மற்றும் சாய்ந்தமருது ஆகிய பொலிஸ் நிலையங்களில் போதியளவு மோட்டார் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமையால், மேற்படி ஆபத்தை விளைவிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்ளை கட்டுப்படுத்துவதில் குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தொடர்ந்தும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என உணரக்கூடியதாகவுள்ளது.

எனவே, இவ்விடயத்தை தங்களின் மேலான கவனத்திற்கொண்டு, இந்த ஆபத்தான சைக்கிள் ஓட்டுனர்ளை கட்டுப்படுத்தும் பொருட்டு அம்பாறையில் இருந்து போக்குவரத்து பொலிஸ் பிரிவொன்றை, மேற்படி பொலிஸ் பிரிவுகளில் வெள்ளிக்கிழமைகளில் விஷேட ஜும்மா தொழுகைக்கு பின்னர் (2.00 மணிக்கு) கடமைகளில் ஈடுபடுத்துமாறு தயவாக கேட்டுக் கொள்கிறேன்.

இந்த விஷேட கடமை ஊடாக, இப்பிரதேச மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், போக்குவரத்து சட்டத்தை முழுமையாக நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு தங்களை பணிவுடன் வேண்டுகின்றேன் என அவர் தனது மகஜரில் குறிப்பிட்டுள்ளார்

இவ்வண்ணம்.

இலங்கைச் சனநாயக
சோசலிசக் குடியரசின் குடிமகன்

பிரதிகள்/தகவலுக்காக;

  1. மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் – அம்பறை
  2. பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ர் – கல்முனை

Sri Lanka Police
Sujith Wedamulla