Category: பிரதான செய்தி

இலங்கையில் எரிபொருள் ஒதுக்கீட்டில் மாற்றம்

இலங்கையில் இந்த வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று காலை புதுப்பிக்க எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இந்த வாரமும் கார்களுக்கான 20 லீட்டர் எரிபொருள் வழங்கப்படவுள்ளது. மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கும் கடந்த வாரம் வழங்கப்பட்ட அதே எரிபொருள்…

ராஜபக்சக்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை – ஜனாதிபதி ரணில் உறுதியாகவுள்ளதாக தகவல்!

ராஜபக்சக்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை – ஜனாதிபதி ரணில் உறுதியாகவுள்ளதாக தகவல்! ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் புதிய அமைச்சரவையில் பதவிகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது. இதில் ஜனாதிபதி ரணில் உறுதியாக இருக்கிறார் என்று ஈழநாடு நாளிதழ் செய்தி கூறுகின்றது. இந்த நிலையில்…

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு! நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் மீண்டும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே குறிப்பிட்டுள்ளார். கொழும்பில்…

சீனக்கப்பல் 16 இல் இலங்கையில் – ஓரளவு முறுகலுக்கு முடிவு

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கண்காணிப்புக் கப்பலான யுவாங் வாங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடலாம் என்ற இலங்கை அரசாங்கத்தின் அனுமதியை தொடர்ந்து துறைமுகத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது. இந்த மாதம் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை…

இலங்கைக்கு எதிராக மற்றுமொரு ஜெனிவா தீர்மானம் – அமெரிக்கா நடவடிக்கை

இலங்கைக்கு எதிரான மற்றுமொரு ஜெனிவா தீர்மானத்தை எதிர்வரும் செப்டெம்பர் 11ம் திகதி ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்க அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடையை நீக்கியது அரசு

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடையை நீக்கியது அரசு இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு குறித்த புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான…

அரச ஊழியர்கள் ஐந்து நாள் வேலை!

அரசாங்க அலுவலகங்களுக்கு சேவைகளை பெறுவதற்கு மக்களின் வருகை அதிகரித்து வருவதனால் அரச ஊழியர்களை வாரத்தில் ஐந்து நாட்களும் வேலைக்கு அழைப்பது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக அறிய முடிகிறது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து குறைவாக காணப்பட்டமையினால் அரச ஊழியர்கள் பணிக்கு வருவதிலும்…

சீன கப்பல் வருவதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்: அதிருப்தியை வெளியிட்டுள்ள அமெரிக்கா

சீனாவின் யுவான் வாங் -5 கப்பல் இலங்கைக்குள் வருவதால், இந்தியாவுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் என்ன என்பதை எழுத்து மூலமாக தெரியப்படுத்துமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் இந்தியா இந்த கோரிக்கைக்கு இதுவரை பதிலளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.…

புதிய மாற்றங்களுடன் அடையாள அட்டை!

இலங்கையர்களின் அடையாள அட்டை புதிய மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கமைய, பயோமெட்ரிக் தரவுகளை இணைத்து டிஜிட்டல் அடையாள அட்டை கட்டமைப்பை தயாரிக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்…

பல்வேறு தரப்பினரின் அதிருப்திக்கு மத்தியில் மின் கட்டணம்!

75 சதவீதத்தினால் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு, சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கம் என்பன எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. இது குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியதாக, அந்த சங்கங்களின் இணை ஒருங்கிணைப்பாளர் அண்டன்…