எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி திங்கட்கிழமை விசேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் 2022 ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை நாட்களைக் காட்டும் குறிப்பில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மீலாத் என்பதன் காரணமாக இந்த விடுமுறை திங்கட்கிழமை வங்கி விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.எனவே, ஒக்டோபர் 10ஆம் திகதி திங்கட்கிழமை விசேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.