அபாயம் நீங்கா பாதைகளை கடந்து நிவாரணம் வழங்கிய கல்முனை பிராந்திய இணையம் கனடா!
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட பேனர்த்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட மலையகம் நோக்கிய நிவாரணப்பணியினை கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பும் முன்னெடுத்திரு;ந்நது. இங்கு இப்போதும் பல இடங’களுக’கான போக்குரத்து அபாயம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. முண் சரிவு அபாயம் முற்றாக நீங்காத நிலையில் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் நேற்றையதினம் நிவாரணப்பொருட்கள் கிடைக்காத பிரதேசங்களை கண்டறிந்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கல்முனை பிராந்திய இணையம் கனடா, மற்றும் கனடாவில் தொழில் புரியும் தாயக நண்பர்கள் சிலரது உதவியில் அனர்த்த அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நுவரெலியா மாவட்டத்தின் சில கிராமங்களில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன .
நுவரெலியா நானுஓயா பகுதியில் இரண்டு பிரிவுகளிலும்,இராகலை பகுதி மக்களுக்கும் உலர் உணவுப்பபொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.
கல்முனை பிராந்திய இனையம் – கல்முனை அமைப்புடன் இணைந்து னடா வாழ் தாயக நண்பர்கள் மாறன்,மதன்,அசோக்,ரதன்,சுதர்சன்,குஞ்சன்,கேசவன்,தீபன்,குணசீலன்,குமார், சிவதாஸ்,ரவி ஆகியோரது நிதிப்பங்களிப்புடனும் இன் நிவாரணபணி முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா நிவாரண பயணம் ஒரு திகில் நிறைந்ததாக அமைந்ததாக நிவாரண பணிக்காக சென்ற குழுவினரோடு பயணித் எமது கல்முனை நெற் ஊடகவியலாளர் தமது பயண அனுபவத்தை விபரித்திருந்தார்.
உண்மையிலையே மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டமாக நுவரெலியா உள்ளது. காலநிலை இன்னும் சீராகாத நிலையில் அம்மாவட்டத்தின் சில கிராமங்களை சேர்ந்த மக்கள் எந்த நேரத்திலும் எதுவும் நுடக்கலாமென்ற அச்சத்துடனேயே வாழ்கின்றனர். இந்த நிவாரணப் பணியை மலையக மக்களுக்கு செய்யவேண்டுமென்று முன்னின்று செயற்பட்ட கல்முனை பிராந்தியம் கனடா அமைப்பின் பிரதான இணைப்பாளர் திரு விஜயரெட்ணம் நொனிசப், திரு விசு கணபதிப்பிள்ளை அமைப்பின் நி்ர்வாக உறுப்பின்ரகள் அவர்களோடு இணைந்த உறவுகள் நண்பர்களுக்கும் மக்கள் நன்றிகளை தெரிவித்தனர்.
தாயகத்தில் இப்பணியை செயற்படுத்த உழைத்த திரு. என். சௌவியதாசன் அவரோடு இணைந்த பெரியநீலாவணை நெக்ஸ் ரெப் அமைப்பின் இளைஞ்கள், கண வரதராஜன் , கிருபானர்தன்,தர்சன் ஆகீயோர் திகில் அனுபவத்துடன் பணியை சிறப்பாக செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

















