2022ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவற்றினை நடத்தும் திகதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவிப்பை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

பரீட்சை நடைபெறும் திகதிகள்

அதன்படி, உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை நடைபெறும்.அத்துடன் இவ்வாண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.