இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் நூற்றாண்டு விழாவையிட்டு நினைவு முத்திரையுடன் சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற திருமதி சுசந்திகா ஜயசிங்கவின் உருவம் பொறிக்கப்பட்ட முத்திரையும் வெளியிடப்பட்டது.

ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன, முத்திரையையும் முதல் நாள் கடித உறையையும் சுசந்திகாவிடம் வழங்கிய போது, அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளர் கலாநிதி அமல் ஹர்ஷத சில்வா, தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன உட்பட பலரும் கலந்துகொண்டனர்.